ஒன்ராறியோவில் இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

Report
4Shares

ஒன்ராறியோவில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பை ஒன்ராறியோ எரிசக்தி சபை அங்கீகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பின் எதிரொலியாக ஒன்ராறியோவின் என்பிரிட்ஜ் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு சுமார் 36 டொலர் அதிகரிப்பை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தென் மற்றும் வட பிராந்திய வாடிக்கையாளர்கள் மேலதிகமாக 40 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், வடமேற்கு பிராந்தியங்களில் 1.71 டொலர் என்ற சிறியளவிலான விலை உயர்வே ஏற்பட்டுள்ளது.

918 total views