நெடுஞ்சாலை 400ல் ஏராளமான பொலிசார்

advertisement

ரொறொன்ரோ-பிளாக் கிரீக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதிபலிப்பாக ஏராளமான பொலிசார் நெடுஞ்சாலை வடக்கில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை இடம்பெற்ற இச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் உடனடியாக தெளிவாகாத போதிலும் நோர்விஞ்ச் டிரைவ் மற்றும் Steels அவெனியுவிற்கு அருகாமையில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் காலை 6.30மணிக்கு சிறிது பின்னராக 50வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுடப்பட்டும் 60-வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தாக்கப்பட்டும் உள்ளனரென அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் நெடுஞ்சாலை 400-வடக்கில் ஏராளமான பொலிஸ் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை 400 வடக்கு நெடுஞ்சாலை 89-ல் பொலிசாரின் நடவடிக்கை காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.

advertisement