கனடாவில் ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள்!

advertisement

கத்தி முனையிலான கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் பதின்மவயதுச் சிறுவர்கள் நால்வர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்த் யோர்க் உயர்நிலை பாடசாலைக்கு வெளியே, வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் நின்றிருந்த 17 வயது சிறுவன் ஒருவரை அணுகிய வேறு நான்கு சிறுவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் கொள்ளையிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த நால்வரில் ஒருவர், குறித்த அந்த 17 வயது சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரிடம் இருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் கொடுத்துவிடுமாறு மிரட்டி, கொள்ளையிட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் இருவர் 16 வயதுடையவர்கள் எனவும், மற்றைய இருவரும் 15 மற்றும் 14 வயதேயான சிறுவர்கள் எனவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கொள்ளை மற்றும் ஆயுத பயன்பாடு தொடர்பிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதன் காரணமாக அவர்களது பெயர் விபரங்களை வெளியிடமுடியாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

advertisement