கனடாவின் மிகப்பெரிய வருடாந்த தெரு திருவிழா ஆரம்பம்!

Report
375Shares
advertisement

ரொறொன்ரோ-கிரேக்க நாட்டின் சுவைகளை சுவைக்கும் கொண்டாட்டம் ரொறொன்ரோவில் இடம்பெறும் மிகப்பெரிய உணவு திருவிழாவாகும்.

இத்தெரு திருவிழா 1.65மில்லியன் பங்கேற்பாளர்களை வரவேற்கின்றது.

வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமாகும் இத்திருவிழா காரணமாக ரொறொன்ரோ சாரதிகளிற்கு வார இறுதி நாட்களில் வாகன போக்குவரத்து மிகவும் அசையும் தன்மை கொண்டதாக இருக்கும் என அறியப்படுகின்றது.

இத்தெருவிழாவிற்காக நகரின் பாரிய வீதிகள் மூடப்பட்டிருக்கும்.

வார இறுதி நாட்களின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை:

டன்வோத் சுவை:

டன்வோத்தில் இடம்பெறும் 24வது வருடாந்த தெரு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்று கிழமை வரை தொடரும்.

கனடாவின் மிகப்பெரிய தெரு திருவிழா இதுவாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்-பாரிய வீதி மூடல்களையும் உள்ளடக்கும்.

புறோட்வியு அவெனியு தொடங்கி ஜோன்ஸ் அவெனியுவரையிலான டன்வோத் அவெனியு சகல பாதைகளும் வெள்ளிக்கிழமை காலை 10மணி தொடக்கம் திங்கள்கிழமை அதிகாலை 3மணிவரை மூடப்பட்டிருக்கும்.

இது மட்டுமன்றி சென்ட்.லோறன்ஸ் சந்தை சுற்று பகுதி ரொறொன்ரோ பழைய டவுனில் வார இறுதியில் சென். ரோரன்ஸ் திருவிழா இடம்பெறுகின்றது.

மூன்று நாட்கள் இடம்பெறும் இவ்விழா காரணமாக பாரிய வீதிகளில் தடைகள் ஏற்படலாம்.

TTC சுரங்க பாதை மூடல்:

திருவிழாக்கள் காரணமாக வீதிகள் மூடப்படுவதுடன் மேலதிகமாக வார இறுதி நாட்களில் TTCசுரங்க பாதை லைன்1-ம் மூடப்பட்டிருக்கும்.

செப்பேர்ட் அவெனியு மேற்கு மற்றும் சென்.ஜோர்ஜ் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதி சுரங்கபாதை ரயில் சேவை மூடப்படும். சிக்னல் மேம்பாட்டு வேலைகள் காரணமாக சனி மற்றும் ஞாயிறு தினங்கள் சேவைகள் இடம்பெற மாட்டாது.

திங்கள்கிழமை சகல சேவைகளும் வழமைக்கு திரும்பும்.

advertisement


10496 total views
advertisement