யாழில் கனடா தம்பதிகளின் திருகுதாளம் அம்பலம்

Report
1066Shares

ஸ்ரீலங்காவிற்கு வருகை கனடா தம்பதியினர் சுமார் 51 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் பின்னர் குறித்த முறைப்பாட்டின் பிரதியை கனடாவில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதி பணத்தை பெற முயற்சி செய்ய செயல் தற்போது அம்பலமாகியுள்ளது.

89 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 7 ம் திகதி இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இம்முறைப்பாடு தொடர்பாக 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

விசாரணைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொடிகாமம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47170 total views