வெள்ளிக்கிழமை இரவு ஒன்ராறியோவின் தென்மேற்கில் இரண்டு சூறாவளிகள்?

Report
107Shares

லிமிங்ரன், ஒன்ராறியோ-வெள்ளிக்கிழமை இரவு ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியை இரண்டு சூறாவளிகள் தொட்டிருக்கலாம் என்பது குறித்து கனடா சுற்று சூழல் புலன்விசாரனை செய்கின்றது.

ஆன்லைனில் வெளியிடப்பட்ட புனல் மேகங்களின் படங்கள் குறிப்பிட்ட பகுதியில் சாத்தியமான சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதால் நிறுவனம் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக வானியல் ஆய்வாளர் றொப் குன் தெரிவித்துள்ளார்.

படங்களில் ஒன்றில் புனல் மேகம் தரையை தொடுவது தெரிந்ததெனவும் அவர் தெரிவித்தார்.

சூரிய பனல்கள் மற்றும் கிரீன் ஹவுஸ் ஒன்றையும் சூறாவளி சேதப்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் கூறினார்.

புயல் மின்கம்பங்களை துண்டித்து திறந்த வெளிகளில் குப்பைகளாக காணப்பட்டன.

வாட்டலூ பகுதிக்கு அருகாமையில் விரைவாக சுழலும் இடி முழக்கத்துடன் கூடிய புயல் அப்பகுதிக்கூடாக சென்றுள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.

இரண்டு சுறாவளிகளும் உறுதிப் படுத்தப்பட்டால் இந்த வருடம் தென் மேற்கு ஒன்ராறியோவில் இது வரை ஏற்பட்ட சூறாவளிகளின் எண்ணிக்கை ஒன்பது ஆகும்.


5424 total views