கொடூரமான விபத்திற்காளான ஒரு தாயின் வெளிப்பாடு?

Report
96Shares

காரின் முன் இருக்கையில் இருக்கும் போது ஒரு போதும் கால்களை முகப்பு பெட்டியின் மேல் வைக்க கூடா தென்பதை இச்செய்கையால் கொடிய விபத்திற்காளான தாய் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்த படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஆட்ரா ராரும் என்பவர் நிரந்தரமாக முடமாக்கப்பட்டார். விபத்து ஒன்றில் அவரது இரண்டு கணுக்கால் திருகுகள், இடுப்புகளில் இரண்டு, முழங்காலில் இரண்டு ஆகியனவற்றை இழந்ததுடன் நான்கு மணித்தியாலங்களிற்கு மேல் நிற்க முடியாத நிலைமைக்கும் ஆளாகியுள்ளார்.

தனது கால்களை முகப்பு பெட்டியின் மேல் போட்டுக்கொண்டிருந்ததால் இத்தனை பாதிப்பும் இவருக்கு ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த போது காற்று பை பறந்து அவரது கால், முகம், கணுக்கால், மூக்கு, மற்றும் தொடை எலும்புகளில் நான்கு இடத்தை உடைத்து விட்டது.

இவரது கணவர் கார் ஒன்றுடன் மோதிய போது விபத்து ஏற்பட்டது. கணவரும் இவரது 10-வயது மகளும் காயமடையவில்லை.

முகப்பு பெட்டியில் தனது மனைவி கால்களை போடுவது தனக்கு விருப்பமில்லை என தெரிவித்த கணவர் அவ்வாறு போடுவது வசதியாக இருப்பதாக ஆட்ரா உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கணவர் இவரை எச்சரித்தும் உள்ளார். காற்று பை பறந்து கால்களின் கீழ்பாகம் தனக்கு மேல்இ ருப்பதை கண்டதாக தெரிவித்தார். .

இவரது வலது பக்கம் முழுவதும் உடைந்து விட்டது.

தனக்கு ஏற்பட்ட இந்நிலையை கருத்தில் கொண்டு ஆட்ரா முகப்பு பெட்டிகளில் கால்களை போடுபவர்களை எச்சரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவரது உடல் முழுவதும் ஊசிகளால் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட வாகனமொன்றில் வந்த நபர் இவர்களது காரிற்கு முன்னால் வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் தனது 31வது வயதில் சம்பவம் நடந்ததாக ஆட்ரா தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களிற்கும் ஏற்படுவதை விரும்பாத இவர் தனது அனுபவத்தை முகநூலிலும் பதிவு செய்துள்ளார்.

5119 total views