கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரியின் மனிதநேயம்! இளைஞனுக்கு கிடைத்த புதிய வாழ்வு

Report
1855Shares

கனடாவில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவருக்கு தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட 18 வயதான இளைஞனுக்கு எதிர்பார்த்த வேலை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேலையை பெற்றுக்கொண்டமை தொடர்பில் திருட முயன்ற இளைஞன், உதவி புரிய தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த வாரம் ரொறன்ரோ நகரிலுள்ள வோல்மார்ட் அங்காடியில் திருடச் சென்ற இளைஞனை அங்குள்ளவர்கள் பிடித்து வைத்திருந்தனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதில் நிரன் ஜெயநேசன் என்ற தமிழ் பொலிஸ் அதிகாரியும் சென்றுள்ளார்.

திருடச் சென்ற இளைஞனிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இதன்போது புதிய வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்ல உள்ளதாகவும், அதற்கு தேவையான ஆடைகள் இல்லாத காரணத்தினால் திருட முயற்சித்ததாக குறிப்பிட்டார்.

திருட வந்த இளைஞன் மீது இரக்கப்பட்ட ஜெபநேசன், அவருக்கு தேவையான ஆடைகளை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்ததுடன், எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அவரை விடுவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நரேன் ஜெயநேசன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

குறித்த சம்பவம் நிகழ்ந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த இளைஞன் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், தனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தான் வாங்கிக் கொடுத்த ஆடைகளை அணிந்து கொண்டு அவர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருட முயன்ற இளைஞனின் தந்தைக்கும் புதிய வேலை கிடைத்துள்ளதாகவும் ஜெயநேசன் மேலும் தெரிவித்தார்.

நான் வாங்கிக் கொடுத்த ஆடையினால் தான் வேலை கிடைத்ததாக குறித்த இளைஞன் கூறினார். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த வாரம் இந்த இளைஞர் தொழிலுக்கு செல்லவுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு தொழில் வழங்கியவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெபநேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திருடச் சென்ற இளைஞன் மீது மனிதாபிமான ரீதியாக செயற்பட்ட நரேன் ஜெபநேசனுக்கு கனேடிய பொலிஸார் மற்றும் மக்கள் பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

58429 total views