அடுத்தது என்ன: சூறாவளி ஜோஸ் யு.எஸ். கனடாவை தாக்கலாம்?

advertisement

இர்மாவின் தாக்கம் அடங்கும் வேளையில் யு.எஸ்சின் பார்வை சூறாவளி ஜோசின் மீது திரும்பியுள்ளது. கரிபியன் தீவுகளின் வடபகுதியில் நிலை கொண்டிருக்கும் ஜோஸ் அடுத்த வாரம் யு.எஸ்சின் கிழக்கு மற்றம் கனடாவை தாக்கலாம் என கருதப்படுகின்றது.

ஜோஸ் தற்போது ஒரு மூன்றாம் வகையில் இருந்து 2ம் வகை சூறாவளியாக குறைந்துள்ளது.

குளோபல் செய்தி வானிலை ஆய்வாளர் றொஸ் Hull அடுத்த சில நாட்களில் 1ம் வகைக்கு பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்சமயம் இது அட்லான்டிக்கிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நிலப்பகுதிகளிலிருந்து வெகு தூரத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் சுற்றிக்கொண்டிருக்கும் இது கரைக்கு வந்து கரொலினாவிலிருந்து எங்காவது நியுபவுன்லாந் நோக்கி தரையிறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உயர் அழுத்த வலிமை கனடாவை தாக்குமா இல்லையா என தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கனடாவின் கிழக்கு பகுதிகள்-ஒன்ராறியோ, கியுபெ மற்றும் அட்லான்டிக் கனடா உட்பட்ட பகுதிகள்- ஜோசின் விளைவுகளை அடுத்தவாரம் உணரும் என கூறப்பட்டுள்ளது.

ஜோசின் அடுத்த அசைவு குறித்து கணனி மாதரியை ஒத்த நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் இன்னமும் ஒரு புயல் கணிப்பு யு.எஸ்.மற்றும் கனடாவிற்கு உள்ளதென அறியப்படுகின்றது.

advertisement