வீடா லிமோவா? விடை காண முடியாத நிலைமை!

advertisement

கனடா-பிரிட்டிஷ் கொலம்பியாவில் சர என்ற இடத்தில் அவசர சேவை பிரிவினரை குழப்பத்தில் ஆழ்த்திய சம்பவம் நடந்துள்ளது.

உல்லாச ஊர்தியொன்று வீடொன்றுடன் மோதி வீட்டிற்குள் நுழைந்த நிலைமை. இந்நிலைமையில் வாகனத்தை அகற்றினால் வீட்டின் முழுக்கட்டிடமும் சரிந்து விடும் நிலை. என்ன செய்வதென்ற இக்கட்டான கட்டத்தில் அவரச சேவை பிரிவினர்.

சனிக்கிழமை அதிகாலை 3-மணிக்கு சிறிது பின்னராக குறிப்பிட்ட வோட் எஸ்யுவி லிமொசின் வீட்டின்சுவருக்கூடாக நுழைந்து எதிர்திசையை நோக்கி நின்று விட்டது.

இந்த விபத்தினால் வீட்டிற்கு விரிவான சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வீட்டின் சுவருக்குள் வாகனம் பதிந்து விட்டது. எப்போது வாகனம் அகற்றப்படும் என்பது தெளிவாக தெரியாதென சரே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாகனம் வீட்டின் கட்டமைப்பிற்கு ஆதரவாக உள்ளதாகவும் அகற்றும் போது வீடு முற்றாகவும் தகரலாம் அல்லது பகுதியாக தகரலாம் என பொலிஸ் சார்ஜன்ட் மக்டொனால்ட் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

மோதிய சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்தெழுந்துள்ளனர். அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பதாலும் கலங்கி இருப்பதாலும் சிரிவி செய்தியாளரின் கமராவிற்கு முன்னால் நின்று நேர்காணல் செய்யப்படுவதை விரும்பவில்லை.

விபத்திற்கான காரணத்தை பொலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.

லிமோவிற்குள் மதுபானங்களுடன் கூடிய பெட்டி ஒன்று கதவினூடாக தெரிவதை பொலிசார் கவனித்துள்ளனர். உயர் ரக மதுபானமான cognac வெற்று போத்தல் ஒன்று மற்றும் தகரங்கள் போன்றனவும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

சாரதிகள் அல்லது பயணிகள் வாகனத்திற்குள் மதுபானம் அருந்துவது பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்ட விரோதமாகும்.

advertisement