கனடாவில் West Nile வைரசினால் இருவர் மரணம்!

Report
90Shares

ஒன்ராறியோ-வின்ட்சரில் West Nile வைரஸ் காரணமாக இருவர் மரணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை வின்ட்ஸர்-எசெக்ஸ் கவுன்ரி சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வைரசிற்கெதிராக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவரவர்களை பாதுகாத்து கொள்ளுமாறும் சுகாதார பிரிவு எச்சரிக்கின்றது.

இந்த வருடத்தின் குளிர் மற்றும் வெப்பநிலை பருவம் குறிப்பாக கெட்ட நுழம்பு சீசன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை உறை பனிக்கு கீழ் செல்லும் வரை வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்ந்தும் ஆபத்தானது.

பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் வயதானவர்கள்.

2012-லிருந்து அறிவிக்கப்பட்ட முதலாவது இறப்புக்கள் இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் ஆரம்பமானதிலிருந்து பல வெஸ்ட் நைல் வைரஸ் சம்பவங்கள் ஒன்ராறியோவில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் கடைசி பகுதியில் ரொறொன்ரோவில் ஒரு சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவில் இரண்டும், சிம்கோ-மஸ்கோகாவில் மூன்று சம்பவங்களும். சட்பெரி பெரும்பாகத்தில் ஒன்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

செப்ரம்பர் 2-வரை 37பேர்கள் வரை ஒன்ராறியோவில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ பொது சுகாதார பிரிவின் தகவல் பிரகாரம் தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் 19ல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒன்று மட்டும்.

இந்நோய் அறிகுறி அற்றதெனவும் 80-சதவிகிதமான மக்களிற்கு எந்த அறிகுறிகளும் தெரியவராதெனவும் கூறப்படுகின்றது.

25சதவிகிதமானவர்களிற்கு காய்ச்சல், தலை மற்றும் உடம்பு வலி, குமட்டல், வாந்தி மற்றும் முதுகு மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் சொறி போன்ற அறிகுறிகள் தென்படும்.

இதிலிருந்து ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக நரம்பு-ஊடுருவி நோய் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால இறுதிப்பகுதி மிக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலப்பகுதியாகும். இக்கால கட்டத்தில் நுளம்புகள் பறவைகளிலிருந்து வேறு உணவு ஆதாரங்களை-மனிதர்கள் போன்ற-தேடும் நேரமாகும்.

குடியிருப்பாளர்கள் இக்காலப்பகுதியில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் நீர் நிலைகளிலிருந்து விலகியிருக்குமாறும் நுழம்புகள் குறித்து தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு நுழம்பு கடியிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறும் சுகாதார பிரிவு அறிவுறுத்துகின்றது. அது மட்டுமன்றிபூச்சிகளை விரட்டும் DEET போன்றனவற்றை உபயோகிக்குமாறும், மெல்லி நிற ஆடைகளை அணிதல், நீண்ட கைகள் கொண்ட மேற்சட்டைகள், நீண்ட காற்சட்டைகள் போன்றனவற்றை அணிவதோடு அதிகாலை மற்றும் இருண்ட நேரங்களில் வெளியே செலவிடும் நேரத்தை குறைக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.

2619 total views