18 போர் ஜெட் விமானங்களை விற்க அமெரிக்கா அங்கீகாரம்

Report
52Shares

தனது விமானப் படையைப் பலப்படுத்த , கனடாவுக்கு தேவைப்படும் 18 போர் ஜெட் விமானங்களை விற்க அமெரிக்கா அங்கீகாரம் வழங்கி உள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதே சமயம் இந்த சுப்பர் ஹோர்நெட் போர் விமானங்களை தயாரிக்கும் போயிங் நிறுவனத்துக்கும் , கனடாவின் Bombardier பொம்பாடியர் நிறுவனத்துக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை , இந்த ஒப்பந்தத்தை குழப்பி விடுமோ என்று அஞ்சப்படுகின்றது .

கடந்த வருடம் கனடிய அரசு இந்தக் கொள்வனவுக்கான வேண்டுதலை விடுத்திருந்தது . தமது தேவைகளுக்கு போதுமானதாக கையிருப்பில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை இல்லையென , இராணுவம் முறைப்பாடு செய்திருந்தது.

கனடாவில் செய்வதானால் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் , கனடா அமெரிக்காவிடமே இந்தக் கொள்வனவை மேற்கொள்ள முடிவெடுத்தது .

5.2 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த விமானக் கொள்வனவுக்கு , நேற்று செவ்வாயன்று, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அங்கீகாரம் வழங்கி இருந்தது .

கனடாவின் விமானஉற்பத்தி நிறுவனமான பொம்பாடியர், அரச உதவியில் தயாரித்த விமானகளை , அமெரிக்காவில் மலிவு விலையில் , சென்ற ஏப்ரல் மாதம் விற்றது , போயிங் நிறுவனத்துடன் முறுகல் நிலையை உருவாக்கி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

2293 total views