கனடா-டர்ஹாம் கிங்ஸ்ரன் பகுதிகளில் பாரிய போதை மருந்து கடத்தல் கும்பல்; கைப்பற்றப்பட்டது!

advertisement

கனடா-டர்ஹாம் கிங்ஸ்ரன் பகுதிகளிலிருந்து 750,000 டொலர்கள் பணம், 20கிலோக்கள் போதை மருந்து மற்றும் இரண்டு துப்பாக்கிகள் பொல்சாரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேட்டையின் போது 18 பேர்கள் கைது செய்யப்பட்டதுடன் 20-கிலோ கிரம்கள் எடையுள்ள பல வேறு தரப்பட்ட போதை மருந்துகள் இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டர்ஹாம் பிரதேச பொலிஸ் தெரிவித்துள்ளது.

வசந்த கால ஆரம்பம் முதல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த விசாரனை மூலம் இப்பறிமுதல் நடாத்தப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் கிங்ஸ்ரன், ஒன்ராறியோ பகுதிகளில் அமைந்துள்ள போதை பொருட்கள் கடத்தும் அமைப்புக்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது மேலும் 3-கார்கள் மற்றும் $150,000 பெறுமதியுள்ள உடைமையும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

advertisement