இர்மாவினால் கடுமையாக தாக்கப்பட்ட கரிபியன் தீவுகளிற்கு $150K நன்கொடை!

advertisement

ரொறொன்ரோ- இர்மா சூறாவளி தாக்கத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் கரிபியன் மக்களிற்கு உதவும் பொருட்டு ஒன்ராறியோ அரசாங்கம் கனடிய செஞ்சிலுவை சங்கத்திடம் 150,000டொலர்களை பங்களிப்பு செய்கின்றது.

இர்மாவும் அதன் விளைவுகளும் மில்லியன் எண்ணிக்கையான மக்களிற்கு கனவுகள் உண்மையானது போன்றதென ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ வண் ஊழியர்கள் மற்றும் உபகரணங்கள் மின்சாரத்தை இழந்து தவிக்கும் மில்லியன் கணக்கான வுளொரிடா மக்களிற்கு வெளிச்சம் கொடுக்க உதவும் பொருட்டு ஏற்கனவே ஆயத்தமென மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக வின் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை வரை சூறாவளியால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆகும்.

ஒன்ராறியோ மக்களின் சார்பாக எங்கள் இதய பூர்வமான இரக்கத்தை தெரிவிப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

கனடிய செஞ்சிலுவை சங்கம் மூலம் தங்களால் இயன்ற தனிப்பட்ட நன்கொடைகளை வழங்கிய மக்களிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

advertisement