கனடாவில் 12,000 பணியாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம்!

Report
288Shares

கனடாவின் மிகச்சிறந்த சில்லறை விற்பனை தொகுதியான ‘சியர்ஸ் கனடா’ அதன் அனைத்து கிளைகளையும் மூடிவிட தீர்மானித்துள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘சியர்ஸ் கனடா’ அதன் எஞ்சியிருக்கும் 130 கிளைகளையும் மூடிவிடும் பட்சத்தில் கிட்டத்தட்ட 12,000 பணியாளர்கள் வேலைகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என கூறப்படுகின்றது.

இந்த முடிவினால் ஏற்படும் வேலை இழப்புக்கள் மற்றும் கடைகள் மூடப்படுவது குறித்து நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளதாக இந்த விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நிறுவனம் அதன் கலைப்பு விற்பனையை ஒக்டோபர் 19ஆம் திகதி ஆரம்பிக்கும் எனவும், இந்த நடவடிக்கைகள் 10 முதல் 14வாரங்கள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10738 total views