கனடிய பிரதமரை வெள்ளை மாளிகையில் அன்புடன் வரவேற்ற டிரம்!

Report
47Shares

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல பெண்மணி மெலநியா டிரம்ப் இருவரும் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் இவரது மனைவி Sophie Gregoire Trudeau இருவரையும் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் அன்புடன் வரவேற்றனர்.

வெள்ளை மாளிகையின் வெளியே கமராக்கள் பளபளக்க டிரம்பும் ட்ரூடோவும் கைகளை குலுக்கி கட்டியணைத்தனர்.

பிரதம மந்திரியும்Gregoire Trudeau வும் முதல் பெண்மணிக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

NAFTA பேச்சு வார்த்தைகள் குறித்த பதட்டமான நிலைக்கு மத்தியில் ட்ரூடோவின் வாசிங்டன் விஜயம் அமைந்துள்ளது.NAFTA பேச்சுவார்த்தை தோல்வுயுறின் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தம் குறித்து நேரடியாக கனடாவுடன் பேச்சு வார்த்தை நடாத்த தயாராக உள்ளதாக புதன்கிழமை டிரம் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் ட்ரூடோ முதல் முதல் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த போது இருவருக்குமிடையில் ஏற்பட்ட ஓரு கைகுலுக்கல் தருணம் இரு தலைவர்களும் ஏரானமான சமூக ஊடகங்களின் வர்ணனைகள் மற்றும் தொடர்வனைகள் மூலம் உற்சாகப்படுத்தப்பட்டனர்.

2448 total views