கனடியர் மறந்து விடப்பட்ட $3K ஐ திருப்பி கொடுத்த ஊழியர்களின் நேர்மை!

Report
105Shares

கனடியர்கள் நயமானவர்களாக இருப்பர் என உலகம் பூராகவும் அறியப்பட்டிருப்பின் ஒன்ராறியோவின் தென்பகுதி உள் ஊர் ரிம் ஹொட்டன் ஒன்றின் ஊழியர்கள் அந்த புகழ்வரை வாழ்ந்திருப்பர் என எண்ணக்கூடிய சம்பவம் நடந்துள்ளது.

குறிப்பிட்ட ரிம் ஹொட்டனில் ஒருவர் மறந்து விட்டு சென்ற 3,000டொலர்களை அதன் சரியான சொந்த காரரிடம் சேர்த்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மொகமட் கௌசரா என்பவர் ரிம் ஹொட்டன் ஒன்றில் தனது நண்பர்களை சந்தித்துள்ளார்.வின்சர் ஒன்ராறியோவில் இச்சம்பவம் நடந்தது.

ஜக்கெட் அணிந்திருந்த கௌசரா வெப்பமாக இருக்க அதனை கழட்டி கதிரை ஒன்றில் போட்டுள்ளார்.

ஒன்று ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் நண்பர்கள் சென்று விட்டனர்.கௌசராவும் தனது ஜக்கெட்டை மறந்து சென்று விட்டார்.

நான்கு நாட்களின் பின்னர் காரின் சாவியை மனைவி கேட்க அதன் பின்னர் வீட்டில் தேடிப்பாரத்தும் கிடைக்கவில்லை. ஜக்கெட்டை மறந்து விட்டு வந்தது நினைவில் வந்துள்ளது.

ஜக்கெட்டும் 68மணித்தியாலங்களாக உணவகத்தின் கதிரையில் கிடந்துள்ளது.

இரவு பணியாளர்கள் இருவர் கண்டு எடுத்துள்ளனர்.

ரிம் ஹொட்டனிற்கு சென்று தனது அடையாளங்களை காட்டி விசாரித்த பின்னர் ஜக்கெட்டை பெற்றுக்கொண்டார். பணமும் அப்படியே இருந்துள்ளது. இவரது மகனின் பல்கலைக்கழக கல்விக்காக செலுத்த வேண்டிய பணம்.

பணியாளர்களும் உரியவரிடமிருந்து தொலை பேசி அழைப்பை எதிர்பார்த்திருந்தனர்.

உடமைகளை எடுத்து பாதுகாப்பாக வைத்த பணியாளர்களிற்கு வெகுமதி வழங்க முன்வந்த போது அவர்கள் மறுத்து விட்டனர்.

ஊழியர்களின் நேர்மையை பாராட்டி புகழ்ந்தார்.

4172 total views