GO நிலையத்தில் தொடையில் துப்பாக்கி கட்டி வைத்திருந்த மனிதன்?

Report
40Shares

ரொறொன்ரோ-- றோஹ் ஹில் GO போக்குவரத்து நிலையத்தில் தொடையில் துப்பாக்கி ஒன்றை கட்டிவைத்திருந்த மனிதன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மனிதன் "சந்தேகத்திற்கிடமின்றி எதையோ மறைத்து" வைத்திருக்கின்றான் என GO போக்குவரத்து விசேட கான்ஸ்டபிள் அறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாழக்கிழமை விசேட கான்ஸ்டபிள் குறிப்பிட்ட மனிதனை கைது செய்துள்ளதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர். லோறன்ஸ் அவெனியு கிழக்கு மற்றும் போட் யூனியன் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

நிராயுதபாணியான கான்ஸ்டபிள் குண்டுகள் நிரப்ப பட்ட துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

நபரை கைது செய்ய ரொறொன்ரோ பொலிஸ் சேவையின் 43-வது பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அதிஷ்டவசமாக துப்பாக்கிதாரி துப்பாக்கியுடன் வீதியில் நடமாடாததால் எவரும் பாதிப்படையவில்லை. கனடிய பொலிஸ் அதிகாரிகள் வீரர்கள் என புழு போக்குவரத்து மெட்ரோலிங்ஸ் செய்தி தொடர்பாளர் ஆன் மேரி எக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

;

2357 total views