தொழிலாளர் உரிமைகளிற்கு ஆதரவாக ஒன்ராறியோ ரிம் ஹொட்டன் பணியாளர்களிற்கு காதலர் தின அட்டைகள்!

Report
58Shares

ஒன்ராறியோ பூராகவும் 200ற்கும் மேற்பட்ட ரிம் ஹொட்டன் நிறுவனங்களின் ஊழியர்களிற்கு விசேட காதலர் தின அட்டைகள் மற்றும் சாக்கலெட்டுக்கள் வழங்கப்பட்டன. தொழிலாளர் உரிமைகள் ஆதரவாளர்களினால் ஊழியர்களின் மேம்படுத்தப்பட்ட பணி நிலைமைகளிற்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.

ஜனவர் 1ல் மாகாணம் குறைந்த பட்ச ஊதியத்;தை உயர்த்தியதை தொடர்ந்து ரிம் ஹொட்டனின் பல உரிமையாளர்கள் பணியாளர்களின் நலன்கள் மற்றும் இடைவேளைகளை குறைத்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக மாகாணம் பூராகவும் ரிம் ஹொட்டன் நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பணியாளர்களின் நன்மைகள் மற்றும் ஊதியத்துடனான இடைவேளைகளை மீண்டும் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2644 total views