ஒன்ராறியோவில் புதிய நிலையான வாடகை குத்தகை படிவம்!

Report
70Shares

மிகவும் இலகுவாக வாசிக்க கூடியதாகவும் விளங்கி கொள்ள கூடியதாகவும் ஒன்ராறியோவின் புதிய வாடகை குத்தகை படிவம் அமைகின்றது. ஏப்ரல் மாதம் இறுதியில் இப்புதிய படிவம் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இப்படிவத்துடன் வழிகாட்டி புத்தகம் ஒன்றும் அடங்கும்.

ஒப்பந்தங்களில் இடம்பெறும் சட்ட விரோதமான விதிமுறைகளிலிருந்து குடியிருப்பாளர்களை இந்த புதிய படிவம் பாதுகாப்பதுடன் இலகுவான மொழியில் விளங்கிகொள்ள கூடியதாக அமையும்.

நிலையான இந்த குத்தகை படிவம் எளிய ஒரு ஆங்கில அல்லது பிரெஞ்ச் மொழியில் அமைந்திருக்கும்.

மாகாணம் பூராகவும் அனைத்து குடியிருப்பாளர்களிற்கும் பொதுவானதாகவும் அமையும். நாங்கள் எதனை ஒப்பு கொள்கின்றோம் என்பதை ஒரு குடியிருப்பாளர் இலகுவாக அறிந்து கொள்ள வசதியாக அமைகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30லிருந்து குடியிருப்பு அலகுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள்இப்புதிய குத்தகை படிவத்தை உபயோகிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. தனிப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்களிற்கும் இது பொருந்தும்.

குத்தகை படிவத்துடன் வெளிவரும் வழிகாட்ட புத்தகம் ஒன்று 21வேறுபட்ட மொழிகளில் வெளியிடப்படும் வெளிவரும் எனவும் மாகாணம் தெரிவிக்கின்றது.

.

3471 total views