பெண்ணின் கண்ணிற்குள் இருந்து 14-புழுக்கள்?

Report
778Shares

பெண் ஒருவரின் கண்ணிற்குள் இருந்து புழுக்கள் வரத்தொடங்கிய சம்பவம் நியு யோர்க்கில் ஒரகோன் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஈக்கள் மூலம் பரவும் ஒரு வகை தொற்றுண்ணி நோய் எனப்படும் இந்த நோய் மனிதனில் கண்டறியப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26-வயதுடைய பெண் ஒருவரின் இடது கண்ணிற்குள் இருந்து 14-சிறிய புழுக்கள் 2016-ஆகஸ்ட் மாதம் அகற்றப்பட்டுள்ளன. இத்தகவலை திங்கள்கிழமை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

2016 ஆகஸ்ட் மாதம் அபி பெக்லி என்பவருக்கு தெலாசியா குளோசியா- Thelazia gulosa-எனப்படும் நோய் கண்டறியப்பட்டது.

வட அமெரிக்கா மற்றும் கனடாவின் தென்பகுதிகளில் கால்நடைகளில் காணப்படும் ஒரு வகை கண் புழுக்களாகும். ஆனால் இவை ஒரு போதும் மனிதர்களிற்கு ஏற்பட்டதில்லை.

முக ஈக்கள் எனப்படும் ஒரு வகை ஈக்களினால் பரவப்படுதாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண் ஒரகொன் கோல்ட் பீச்சில்-ஒரு கரையோர கால்நடை பண்ணை பகுதியில் குதிரை சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்றன வற்றை செய்துள்ளார்.

ஒரு வாரத்தின் பின்னர் இவரது கண்ணில் எரிச்சல் ஏற்பட தொடங்கியபோது பெக்லி கண்ணிலிருந்து ஒரு புழுவை இழுத்துள்ளார். தொடர்ந்து ஒரு வார காலத்தில் வைத்தியர்கள் 13 புழுக்களை இழுத்தெடுத்தனர்.

இப்புழுக்கள் ஒளிபுக கூடியவை எனவும் ஒவ்வொன்றும் அரை அங்குல நீளத்திற்கும் குறைவானவை.

பூனைகள் நாய்கள் உட்பட்ட பல மிருகங்களில் கண் புழுக்கள் காணப்படும். இவை ஈக்களினால் பரவக்கூடியவை.

24180 total views