அமெரிக்க பொருட்களைப் புறக்கணிக்கும் கனெடியர்கள்

Report
351Shares

வடக்கு கனடாவில் உள்ள கொள்வனவாளர்கள் அமெரிக்காவின் பொருட்களை நுகர்வதனைத் தவிர்த்து வருகின்றனர்.

நடந்து முடிந்த G7 மாநாட்டினைத் தொடர்ந்துஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்தே கனெடிய கொள்வனவாளர்கள் இவ்வாறு செயற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கனெடியப் பிரதமர் தொடர்பாக ட்ரம்ப் விமர்சித்தமையினை பிரதமர் ட்ரூடோ தமது ஆலோசகர்களை அணுகுவதன் மூலம் இலகுவாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது கனெடிய-அமெரிக்க வர்த்தக அழுத்தங்கள் மூலம் சரிசெய்து கொள்ளலாம் ஆனால் ட்ரம்ப் மீதான கோபத்தினை நாங்கள் இவ்வாறுதான் வெளிக்காட்ட முடியும் என்றனர்.

இந்நிலையில் ட்ரம்பின் தனிப்பட்ட டுவிட்டர் பதிவு நாடுகளுக்கிடையிலான நல்லுறவினைப் பாதித்துவிடுகின்ற நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

11652 total views