ரொறொன்ரோவில் துப்பாக்கிகள் கும்பல்களை கட்டுப்படுத்த 25மில்லியன் டொலர்கள்!

Report
76Shares

ரொறொன்ரோவில் துப்பாக்கிகள் மற்றும் கும்பல்களை கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் 25-மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ அரசாங்கத்திடமிருந்து பெறும் என டக் வோட் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்த வருடம் நகரில் அதிகரித்த துப்பாக்கி வன்முறை எழுச்சிகளை அதிகாரிகள் வெளிப்படுத்த இந்த பணம் நான்கு ஆண்டுகள் பயன் படுத்தப்படும் என வோட் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள் கும்பல்கள் குறித்து மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் ரொறொன்ரோவில் ஆரம்பித்து ஒட்டாவா மற்றும் பகுதிகளிலும் ஊடுருவியுள்ளதென வோட் தெரிவித்தார்.

18மில்லியன் டொலர்கள் ரொறொன்ரோ பொலிஸிற்கு ஒதுக்கீடு செய்யப்படும். போதை மருந்து கும்பல்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகள் குறித்த டிஜிட்டல் புலன்விசாரனை மற்றும் ஏனைய நடவடிக்கைகளை சமாளிக்க வழங்கப்படும்.

7.6மில்லியன் டொலர்கள் நீதிமன்றங்களில் அணிகளை உருவாக்க பயன்படுத்தப்படும்.

வன்முறை துப்பாக்கி குற்றவாளிகளை ஜெயிலில் போடவும் ஜாமினில் விடுவதை தவிர்த்தல்-ஒவ்வொரு அணியும் ஒரு பணியை மட்டுமே கொண்டிருக்கும் எனவும் வோட் தெரிவித்துள்ளார்.

2913 total views