கனடாவில் நவம்பர் 3-ந்தேதி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது

இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா சென்றார்.

ரொறன்ரோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இளையராஜா இன்று பகல் 11:00 மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை.

எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று ஹோலுக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

6,104 total views, 1 views today