அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்பு, கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரும் டுவிட்டர் மூலம், மோதிக்கொண்டுள்ளனர்.

arnoldதமக்குப் பிறகு “தி அப்ரெண்டைஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரை டிரம்ப் கேலி செய்தார். நிகழ்ச்சியின் தர-மதிப்பீடு மிகவும் குறைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்குமிடையில் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டது. டிரம்ப்பும் அர்னால்டு இருவருமே அரசியலுக்கு வருவதற்கு முன்னரே பிரபலங்கள். “தி அப்ரெண்டைஸ்” நிகழ்ச்சியின் 14 பருவங்களுக்குத் தொகுப்பாளராக இருந்தபோது டிரம்ப், பெருமளவில் பிரபலமடைந்தார்.

பிரபல முன்னாள் ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு டிரம்ப்பின் கிண்டலுக்குத் தமது டுவிட்டர் பதிவில் பதிலடி கொடுத்தார். டிரம்ப் தமது அதிபர் பதவியின் பொறுப்புகளில் கவனத்தைத் திருப்பவேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

அத்துடன், 1861ஆம் ஆண்டில் ஆபிரஹாம் லிங்கன் அதிபராக பதவியேற்றபோது, தமது உரையில் கூறியதை ஆராயுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். லிங்கன் தமது உரையில், “அமெரிக்கர்கள் அனைவரும் எதிரிகள் அல்ல, நண்பர்கள். நாம் எதிரிகளாக்க கூடாது” என்று கூறியிருந்தார்.

அது அமெரிக்கர்களை ஒன்றிணைக்கத் டிரம்ப்புக்கு உத்வேகம் கொடுக்கக்கூடும் என்று அர்னால்டு குறிப்பிட்டார்.

26,084 total views, 1 views today