தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடுமழையால் 18 பேர் பலியாகிவுள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளது.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை வெள்ளத்தினால் இதுவரை 18 பேர் பலியாகிவுள்ளனர்.

வெள்ளத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லது போயுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வழமையாக தாய்லாந்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை வறட்சி மிகு குளிர் காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ் வருடம் வழக்கத்துக்கு மாறாக தொடர் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.taevan taevan01

30,539 total views, 1 views today