சனவரி 8ஆம் நாள் ஞாயிறு மாலை பியர்சன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள மாபெரும் வரவேற்பு விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை வாழ்த்தி வரவேற்று கனடாவில் பெரிய மாநிலமும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் ஒன்ராரியோ மாநில முதல்வர் கதலீன் வெயின் அவர்கள் ஒரு வாழ்த்தறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் இன்றைய வரவேற்பு விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளும் சிறீலங்காவின் வடமாகாண முதலமைச்சர் கௌரவ விக்கினேஸ்வரன் அவர்களையும் ஏனைய விருந்தினர்களையும் ஒன்ராரியோ அரசின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றேன்.

ஒன்ராரியோ மற்றும் இலங்கையிலுள்ள வடமாகாண சபையுடன் கலாச்சார பரிவர்த்தனை மற்றும் சர்வதேச நல்லுறவுவை வளர்ப்தினூடாக எமது உறவைப் பலப்படு;த்துவதில் ஏனையவர்களுடன் நானும் உறுதியாக உள்ளேன்.

தமிழ் கலாச்சாரத்தின் அழகு உன்னதம் ஆகியவற்றை நினைவு கூறும் தமிழ் மரபுரிமைத் திங்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது என தன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ள ஒன்ராரியோ முதல்வர் ஒன்ராரியோவில் தமிழர் சமூகத்தின் பங்களிப்பையும் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

canada

canada1 canada2 canada3 canada4 canada5

17,232 total views, 1 views today