அமெரிக்காவில் புளொரிடா மாநில விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிதாரிகளின் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த கனேடிய குடும்பம் ஒன்று தற்போது அவர்களது சொந்த நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட போது தனது குடும்பத்தாருடன், அங்கிருந்த கதிரைகளின் கீழ் ஒழிந்துகொண்ட கிம் லா மற்றும் அவருடைய குடும்பமே இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய அனுபவங்களை அவர்கள் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் கூறுகையில், தாங்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்காலிகளின் கீழ் ஒழிந்துகொண்டதாகவும், தனது குழந்தைகளையும் தாங்கள் அவ்வாறே பாதுகாத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய வாழ்க்கையில் இத்தகைய ஒரு பயத்தை தான் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று கூறும் கிம் இனி ஒருபோதும் இத்தகைய பயம் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சுனாமி ஏற்படுவதை பார்த்து மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள அலறுவது போன்று அங்கிருந்தவர்கள் அலறியதாகவும், தான் அனுபவித்த மிகப் பயங்கரமான தருணம் இது தான் என்றும் கிம் மேலும் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறான போதும், தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் குறித்த அதிர்ச்சியில் இருந்து தற்போது மீண்டுள்ளதாகவும் அதனால் அவர்கள் தமது சொந்த நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image1

50,586 total views, 1 views today