கனடாவின் மொன்றியல் மாநிலத்தில் பல்சிகிச்சையில் பல்வைத்தியர் ஒருவர் புதிய நுட்பம் ஒன்றினை கடைப்பிடிக்கின்றார்.

அவர், செல்லப்பிராணிகளைக் கொண்டு நோயாளிகளின் கவனத்தை திசை திருப்பி அதன் மூலமாக தனது சிகிச்சையை இலகுவாக முடித்துக்காட்டுகிறார்.

பல்சிகிச்சை நிபுணரான ரேச்சல் கேரியர் இந்த புதிய நுட்பத்தை கண்டறிந்து இதன் மூலமாக தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அவர்கள் சிரமப்படாத வகையில் சிகிச்சைகளை மேற்கொண்டு விடுகின்றார்.

குறிப்பாக நாய் போன்ற செல்லப் பிராணிகளை நம் எல்லோருக்கும் பிடிக்கும். அத்தகைய பிராணிகளை சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் கொடுத்து அவர்களுடைய மடியில் அவற்றை படுக்கச்செய்கிறார்.

பின்னர் அந்த பிராணியுடன் குறித்த நோயாளி நன்கு பழக ஆரம்பித்ததும் வைத்தியர் தன்னுடைய சிகிச்சையை ஆரம்பிக்கின்றார். இதன் காரணமாக நோயாளிகளின் கவனம் பிராணிகள் மீது குவிந்து விடுவதுடன் தமக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

இதன் பயனான விரைவாக சிகிச்சைகள் முடிவடைவதுடன், நோயாளிகளின் வீண் பயம் மற்றும் சௌகரியம் போன்றன தவிர்க்கப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
image-11-7

51,560 total views, 1 views today