அமெரிக்க ஜனாதிபதிகளின் பயணத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எயார் ஃபோர்ஸ் வன் ரக விமானத்தில் இன்று இரவு தனது கடைசி பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20ம் திகதி பதவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில், தனது பதவிக் காலத்தின் இறுதிச் சில நாட்களில் இருக்கும் ஒபாமா, நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் முகமாக, தனது உத்தியோகபூர்வ விமானத்தில் தனது சொந்த ஊரான சிக்காகோவுக்கு எயார்ஃபோர்ஸ் வன் விமானத்தில் செல்லவிருக்கிறார்.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அமெரிக்காவுக்கு சிறப்புரை ஒன்றை ஆற்றவும் ஒபாமா தயாராகியிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்காவின் வழக்கப்படி ட்ரம்ப்பின் பதவியேற்பின் பின், ஒபாமாவும் அவரது மனைவியும் எயார்ஃபோர்ஸ் வன் விமானத்தில் அழைத்துச் சென்றுவரப்படுவர். எனினும், அதன்போது அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது பற்றித் தெரிவிக்கப்படவில்லை.Obama Obama_01

75,158 total views, 1 views today