அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்பின் பிரசார சுலோ­க­மான Make America Great Again” (அமெ­ரிக்­காவை மீண்டும் மகத்­தா­ன­தாக்­குங்கள்) எனும் சுலோகம் பொறிக்­கப்­பட்ட தொப்­பி­யொன்றை நீதி­மன்­றத்தில் அணிந்­தி­ருந்த கனேடிய நீதி­பதி ஒருவர் பணி­யி­லி­ருந்து இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.

ஒன்­டா­ரியோ மாநி­லத்தைச் சேர்ந்த பேர்ன்ட் ஸபெல் எனும் நீதி­ப­தியே இவ்­வாறு இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஏ.எவ்.பி. தெரி­வித்­துள்­ளது.

‘அமெ­ரிக்­காவை மீண்டும் மகத்­தா­ன­தாக்­குங்கள் எனும் சுலோ­கத்­துடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­சாரம் செய்த டொனால்ட் ட்ரம்ப் பலர் எதிர்­பா­ராத வகையில் அத்­ தேர்­தலில் வெற்றி பெற்றார்.

இத்­ தேர்தல் பெறு­பேறு வெளி­யா­கிய நவம்பர் 9 ஆம் திகதி ஹமில்டன் நக­ரி­லுள்ள நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ரணை ஒன்றை நடத்­திய நீதி­பதி பேர்ன்ட் ஸபெல், டொனால்ட் ட்ரம்பின் சுலோகம் பொறிக்­கப்­பட்ட தொப்­பியை அணிந்­தி­ருந்தார்.

இது தொடர்­பாக கனே­டிய குற்­ற­வியல் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆட்­சேபம் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், கடந்த மாதம் 21 ஆம் திகதி, வழக்கு விசா­ர­ணை­யொன்றில் பங்­கு­பற்­று­வ­தி­லி­ருந்து நீதி­பதி பேர்ன்ட் ஸபெல் தடுக்­கப்­பட்டார் என கனே­டிய ஊட­கங்கள் கடந்த வெள்­ளிக்
கி­ழமை தெரி­வித்­துள்­ளன.

1990 ஆம் ஆண்டு நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட பேர்ன்ட் ஸபெல், தனது சக நீதி­ப­திகள் அனை­வரும் ஹிலா­ரியின் ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்­தனர் எனவும் தான் மாத்­திரம் ட்ரம்­புக்கு ஆத­ர­வா­ன­வ­ரா­க இருந்­த­தாகவும் தெரி­வித்­துள்­ளனர்.

தனது சகாக்­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில், மேற்­படி தொப்­பியை தான் அணிந்­தி­ருந்­தாக அவர் கூறினார்.

எனினும், நீதி­பதி எனும் வகையில் அர­சியல் நடு­நி­லையை வெளிப்­ப­டுத்த வேண்­டியநிலையில், தொடர்ச்சியாக டொனால்ட் ட்ரம்புக்கு வெளிப்படையான ஆதரவை நீதிபதி பேர்ன்ட் ஸபெல் வெளியிட்டு வந்தார் என பல முறைப்பாடுகள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

87,244 total views, 1 views today