மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் ப்ரோ ஹைப்ரிட் 5 மடிக்கணினி விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைக்ரோ சொப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் ப்ரோ ஹைப்ரிட் 5 மடிக்கணினி சாதனத்தை இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய சர்ஃபேஸ் ப்ரோ 5 சாதனத்தில் 4K அல்ட்ரா எச்டி திரை, வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட மாக்னெடிக் ஸ்டைலஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ சாதனங்களை போன்றே புதிய சர்ஃபேஸ் ப்ரோ 5 மடிக்கணினி பெகட்ரான் மூலம் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் புதிய சாதனத்தில் குவான்டா கணினியை உள்ளீர்க்க மைக்ரோ சொப்ட் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. தற்சமயம் வரை இது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

சர்ஃபேஸ் ப்ரோவுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சர்ஃபேஸ் ஸ்டூடியோ AIO உள்ளிட்டவை பெகட்ரானின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி மைக்ரோ சொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்கு தளத்தினை இணைய விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

65,906 total views, 1 views today