அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தனது மருமகனுக்கு ஆட்சியில் முக்கிய பதவி வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்பின் மகளான இவான்காவின் கணவர் Jared Kushner(35) என்பவருக்கு தான் வெள்ளை மாளிகையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை கையாளவும் மத்திய கிழக்கு ஆசிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கவும் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அமெரிக்க சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என உறுதிமொழி ஏற்ற பிறகு ஜார்ட் குஷ்னர் பதவியேற்க உள்ளார்.

இந்த பதவியை ஏற்க அமெரிக்க செனட்டின் ஒப்புதல் பெறுவது அவசியமில்லை.

டிரம்பின் மகளான இவான்கா அதிகராப்பூர்மான ஆலோசகராக இல்லாவிட்டாலும், அவரது தந்தைக்கு நன்பத்தகுந்த ஆலோசகராக செயல்படுவார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளி மாளிகை பதவிகள் குடும்ப உறுப்பினர்களுக்காக இருக்க கூடாது என ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ள நிலையில தற்போது டிரம்பின் மருமகனுக்கு முக்கிய பதவி வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

38,098 total views, 1 views today