சஸ்காச்சுவான் மாகாணத்தின் தலைநகரும், மிகப்பெரிய நகருமான ரெஜைனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டமான காலநிலையால் சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

வீதிகளில் வெள்ளை திரையிட்டது போல் பனிமூட்டம் காணப்படுகின்றமையானது, பல்வேறு விபத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அதிகாலை 4.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 23 வாகன விபத்துக்கள் பதிவாகி இருப்பதாக ரெஜைனா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த பனிமூட்டமான காலப்பகுதியில் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில், வாகன சாரதிகளை மெதுவாகவும், அவதானத்துடனும் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

mist01

56,129 total views, 1 views today