ஆப்கானிஸ்தான், கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 ஐக்கிய அரபு இரச்சியத்தின் இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காயமடைந்துள்ளதாகவும் இராஜதந்திரிகள் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் ஐக்கிய அரபு இரச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இக் குண்டுவெடிப்பு நேற்று ஆப்கானிஸ்தான், கந்தகார் நகரில் ஆளுநரின் வீட்டிற்கருகில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்ட குழுவினர் ஆளுநரின் வீட்டிற்கு சென்றபோது இக் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

somale

12,134 total views, 1 views today