வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். இந்த கூட்டம் ஜனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு 875 Morningside Ave Scarborough வில் அமைந்திருக்கும்
PAN AM CENTRE – Scarborough எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

தாயக மக்களின் சமகால நிலை குறித்து விரிவான உரையை வழங்கவிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களின் வினாக்களுக்கும் அங்கு பதில் கூறவுள்ளார்.

இந்த கூட்டத்தில் கனடா வாழ் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

15,346 total views, 1 views today