ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் அன்ரோனியோ தஜானியை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரித்தானியா டவுனிங் வீதியில் அமைந்துள்ள பத்தாம் இலக்க இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கேற்ப பிரித்தானிய நாடாளுமன்றமும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறிருக்க, ஜூன் மாத ஆரம்பத்தில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரெக்சிற் தலைமைப் பேச்சாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக இல்லை எனினும் தேர்தல் காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
kio-0

6,130 total views, 1 views today