கனடாவின் அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது 2 சதவீதம் ஏற்றம் காணும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும், அடுத்த ஆண்டு கனடாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், அது 1.9 சதவீமானதாகவே இருக்கும் என்றும் கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்குமெனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டிருந்தது. கனேடிய மத்திய வங்கி முன்னதாக வெளியிட்டிருந்த 2.1 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற எதிர்பார்ப்பை விட இது கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பொருளாதாரம் முன்னேற்றம் காணும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், ஏற்கனவே எதிர்வு கூறியது போன்று கனடாவின் இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.9 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடும் என மீளவும் வலியுறுத்தியுள்ளது.
canada-1

5,514 total views, 1 views today