கனடிய அரசியல் களம் சமீப காலங்களாக தமிழர் பிரவேசங்களால் சூடு பிடித்தாலும் தமிழ் இளையவர்கள் இதில் இருந்து தள்ளி நிற்கின்றார்களோ என்ற கவலை பலரிடம் இருந்ததை காண முடிந்தது. இல்லை நாங்களும் களத்திற்கு வந்துவிட்டோம் எனக்கூறிக்கொண்டு கனடிய தமிழ் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான விஜய் தனிகாசலமே களத்தில் குதித்துள்ளார்.

கனடிய பட்டதாரியான இவர் தமிழ் இளையோர் செயற்பாடுகளின் ஒருங்கமைப்பாளராக தொழிற்பட்டு தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தற்போது புதிதாக உருவாகியுள்ள ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநிலங்களவைக்கான தேர்தலில்

பற்றிக் பிறவுன் தலைமையிலான பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவுத் தேர்தலையே ஏப்ரல் 22ஆம் நாள் அதாவது வரும் சனிக்கிழமை காலை எதிர்கொள்கின்றார். 20 ரெகாம் பிளேஸ் ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை இதற்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

ஏற்கனவே உறுப்பினர்களாக இணைந்தவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம் என்பதால் அவ்வாறு உறுப்பினர்களாக உள்ளோர் வாக்களிக்கச் செல்லும் போது தமது படம் கூடிய அடையாள அட்டை ஒன்றையும் தமது முகவரியை உறுதிப்படுத்தக் கூடிய அடையாள அட்டை ஒன்றையும் எடுத்துச் செல்லுமாறு வேண்டப்படுகின்றனர். கனடிய தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு விஐய் தனிகாசலத்திற்கு வாக்களிப்போம் என கனடிய தமிழ் இளையோருடன் இணைந்து தமிழ் முத்தோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தேர்தலில் விஜய்யினூடக

தமிழ் இளையவர்கள் காட்டும் எழுச்சி பெரு மகிழ்வையும் எதிர்காலம் குறித்த மனநிம்மதியையும் தருவதாக தமிழ் முத்தோர் பலர் தெரிவித்தனர்.
vijay

Vote for Vijay Thanigasalam in the nomination election! Date: Saturday, April 22 Time: 9:00am – 1:00pm
Location: Scarborough Convention Centre (Neilson & Finch) 20 Torham Place, Scarborough,

Bring: Proof of identification (valid driver’s license or student ID card) Proof of address (valid driver’s license or recent report card

16,262 total views, 1 views today