விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசிய ஆவணங்களை வழங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செல்ஸீ மேன்னிங் விடுதலை செய்யப்பட்டார்.

தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்ட பிராட்லி மேன்னிங் என்ற செல்ஸீ மேன்னிங் ராணுவத்தில் பணியாற்றிய போது 7.5 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜனாதிபதியாக இருந்த ஒபாமா இவரது தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் செல்ஸீ மேன்னிங் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

chelsa_manning

5,637 total views, 1 views today