அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இல்லாத நேரத்தில் அவரது மகளான இவான்கா டிரம்ப் முக்கியமான கூட்டம் ஒன்றிற்கு தலைமை வகித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களை கடத்தி வந்து அடிமைத்தனமாக பணியில் அமர்த்தும் சட்டரோத நடவடிக்கை தொடர்பாக நேற்று டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

ஆனால், எதிர்பாராத விதமாக இதே தினத்தில் Connecticut நகரில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் அதில் பங்கேற்க டொனால்ட் டிரம்ப் சென்றுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்ட மேஜை கூட்டதில் டிரம்பின் மூத்த மகளான இவான்கா பங்கேற்று தலைமை வகித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரவு கட்சி தலைவர்கள் மட்டுமின்றி ஜனநாயக கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் சுமார் 2 நிமிடங்கள் பேசிய இவான்கா மனித கடத்தலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் கடந்த 2016-ம் ஆண்டு 8,000 நபர்கள் அவர்களின் விருப்பம் விருப்பம் இல்லாமல் கடத்தி வரப்பட்டதாகவும், இது 2015-ம் ஆண்டின் எண்ணிக்கையை விட 35 சதவிகிதம் அதிகம் என இவான்கா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது தந்தை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் முக்கிய விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தனது பங்களிப்பினை வழங்குவேன் என இவான்கா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் தந்தையுமான டொனால்ட் டிரம்ப் இல்லாத நேரத்தில் அவரது பதவியில் இருந்து இவான்கா ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4,981 total views, 1 views today