ஆப்கானிஸ்தானில் பெரும்பாலும் பெண் பணியாளர்களை உள்ளடக்கிய பெண்களுக்கான தொலைக்காட்சி சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல துறைகளில் ஆண்களின் ஆதிக்கம் காணப்படுகின்ற நிலையில், ஊடகத்துறையில் சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

ஆப்கான் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகவும், செய்தி வாசிப்பாளர்களாகவும் பெண்கள் காணப்படுகின்ற போதிலும், அதற்கு கலாசார ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் பெண்களை ஈடுபடுத்தி பெண்களுக்கான பிரத்தியேக தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை புதுமையான விடயமாக அமைந்துள்ளது.

பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் தமது வாழ்க்கையையும், தொழிலையையும் நிர்ணயித்துக் கொள்வதற்கு ஊக்குவிக்கும் வகையிலேயே இத்தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய 54 இளம் யுவதிகளை கொண்டே இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேவேளை, தொழில்நுட்பம்சார் பிரிவுகளில் மாத்திரம் திரைக்கு பின்னால் 16 ஆண்கள் பணியில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,159 total views, 1 views today