அமெரிக்காவில் முத்த மிட்டவரின் நாக்கில் பாம்பு கொத்தியதால் வேதனையில் துடித்தவரை புளேரிடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் முத்தமிட முயன்றவரின் நாக்கில் கொத்திய பாம்பு
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள புட்னாம் பகுதியை சேர்ந்தவர் ரான் ரினால்டு. இவரது பக்கத்து வீட்டில் சார்லஸ் கோப் என்பவர் தங்கியுள்ளார்.

இவரது வீட்டின் அருகே ‘ரேட்டில் சினேக்‘ என்ற கிலுஇலுப்பை பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது. அது குறித்து ரான் ரினால் டிடம் சார்லஸ் கோப் கூறினார்.

உடனே ரான் ரினால்டு அங்கு சென்று பாம்பை பார்த்தார். பின்னர் கையில் எடுத்து கொஞ்சினார். ஒரு கால கட்டத்தில் அந்த பாம்பை முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த பாம்பு திடீரென ஆவேசமடைந்தது. முத்த மிட்ட அவரின் நாக்கில் ‘நச்‘ சென கொத்தி விட்டு கையில் இருந்து நழுவி கீழே விழுந்து ஓடி விட்டது.

பாம்பு கொத்தியதால் வேதனையில் துடித்த ரான் ரினால்டை புளேரிடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

4,445 total views, 1 views today