ஒன்ராறியோவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளவரசி டயானா தொடக்க விருதை பெறுகின்றார். இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட டயானா தொடக்க விருது உலகம் பூராகவும் உள்ள 20 இளவயதினருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர்களில் ஒன்ராறியோவை சேர்ந்த 14-வயது இளம் பெண் ஒருவரும் அடங்குகின்றார். வியாழக்கிழமை இந்த விருது வழங்கல் சென்ட். ஜேம்ஸ் மாளிகை, லண்டனில் இடம்பெற்றது.

வேல்ஸ் இளவரசி டயானாவின் ஞாபகார்த்தமாக இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.  உலகத்தை சிறந்ததாக மாற்றும் சக்தி இளைஞர்களிடத்தில் உள்ளதென டயானா நம்பிக்கை கொண்டிருந்தார்.

பீற்றபொறோ ஒன்ராறியோவை சேர்ந்த வெயித் டிக்கின்சன் என்பவர் “Cuddles for Canada,”  என கண்டறியப்பட்டார். இப்பெண் ஒன்பது வயதாக இருக்கையில் இவரது அத்தைக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனை தொடரந்து இவள்”Cuddles for Canada,”  என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினாள்.

சிகிச்சையின் போது வெயித்தின் அத்தை மிகவும் குளிராக இருப்பதாக தெரிவிக்க வெயித் கம்பளி உரோம போர்வை ஒன்றை செய்தாள்.
அன்றிலிருந்து கிட்டத்தட்ட 3,000போர்வைகளை உருவாக்கினாள்.

கனடா மற்றும் பல உலக நாடுகளிற்கும் அவைகளை அனுப்பி அதன் மூலம் 30,000டொலர்களிற்கும் மேலான தொகை பணத்தை சேகரித்தாள். தேவை பட்டவர்களிற்கு இப்போர்வைகள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதையும் உறுதிசெய்தாள்.

வெயித் தன்விருப்பமாக ஒவ்வொரு போர்வைகளையும் பொழுது போக்கு அல்லது பிடித்த நிறம் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு தயாரித்ததுடன் போரில் காயமடைந்து அல்லது காயத்திற்கு பின்னர் ஏற்படும் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு {PTSD}வீடு திரும்பும் போர்வீரர்களிற்கும் வழங்கப்படும் என டயான அவாட் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

விருது விழாவில் பேசிய இளவரசர் வில்லியம் மில்லியன் கணக்கான மக்களை தனது தாயார் அவரது வாழ்நாளில் தொட்டுள்ளார் எனவும் அவரது எண்ணற்ற இரக்கமும் துணிவும் வாகன விபத்தொன்றில் இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அவர் இறந்த போதும் இன்றுவரை நிலைத்துள்ளதென தெரிவித்தார்.

dianadiana2diana3

14,873 total views, 2 views today