சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியர் ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியர் ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது பெயர் முகமது ‌ஷபி அர்மார் (30). இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

கர்நாடகத்தில் பக்தல் பகுதியை சேர்ந்த இவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி இந்திய அரசின் நெருக்கடி காரணமாக இவர் தனது சகோதரருடன் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுள்ளார். தொழில்நுட்பம் படித்த இவர் பேஸ்புக் மூலம் இந்தியா, வங்காள தேசம், மற்றும் இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர் மீது இன்டர்போல் பொலிசாரின் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கும்படி அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்று அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்தியர் ஆவார்.

indian_militants

9,913 total views, 16 views today