பீகார் மாநிலத்தில் பெகுசராய் நகரில் உள்ள பள்ளியில் சுன்சன் ஷா என்பவற்றின் இரண்டு மகள்கள் படித்து வந்துள்ளனர்.

மூத்த மகள் முதல் வகுப்பிலும், இரண்டாம் மகள் பிரைமரியிலும் படித்து வந்துள்ளனர். பள்ளி கட்டணத்தை கட்டும் படி பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் வறுமை காரணமாக கால அவகாசம் கேட்டுள்ளார் சுன்சன்.

மீண்டும் பள்ளி நிர்வாகம் கட்டணத்தை கட்ட சொல்லியும் சுன்சனால் கட்ட முடியாததால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஒருவர் இரண்டு குழந்தைகளின் ஆடையையும் உருவி அரை நிர்வாணமாக பள்ளியை விட்டு விரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சுன்சன் போலீஸில் புகார் அளிக்க அந்த பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியை என மூவரையும் கைது செய்துள்ளனர்.

5,234 total views, 4 views today