கொலம்பியாவில் 3 ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த ஆண்டு 2016 ஏப்ரல் மாதம் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, பல ஓரினச் சேர்க்கையாளர்கள், தங்களின் விருப்ப துணையை திருமணம் செய்து கொண்டனர்.

அந்த வகையில் தற்போது கொலம்பியாவின் பிரபல நடிகரான விக்டர் ஹீகோ பிராடா மற்றும் அவரது நண்பர்கள் விளையாட்டு ஆர்வலர் ஜான் அலிஜான்ட்ரோ ரோட்ரிகுஸ் மற்றும் பத்திரிக்கையாளர் மனுவல் ஜோஸ் பெர்முடெஸ் 3 பேரும் ஓரினச் சேர்க்கை செய்யும் ஒரே குடும்பம் என்ற அந்தஸ்தை பெற சட்ட அங்கீகாரம் கேட்டு கொலம்பியா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அவர்கள் மூன்று பேரும் திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்க உரிமை வழங்கி உத்தரவிட்டது.

same-sex

3,793 total views, 3 views today