ஒன்ராறியோ வீடு விற்பனை முகவர் தரகர்களின் மதிப்பீட்டின் படி புகைபிடித்தலினால் பெருந்தொகை பணத்தை வீட்டுச்சொந்தக் காரர்கள் இழக்க நேரிடுமெனத் தெரியவந்துள்ளது. வீட்டிற்குள் புகைபிடித்தலின் மூலம் வீட்டின் பெறுமதி 29 சத வீதம் குறையலாமென கூறப்படுகின்றது.

ஒன்ராறியோவில. $369,000 விலைமதிப்புள்ள வீடொன்றிற்கு $107,000வரை இழக்க நேரிடலாமெனக் கருதப்படுகின்றது. பெரும்பான்மையான வீடு விற்பனை முகவர்களும் தரகர்களும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்களின் வீடுகளை விற்பது கடினம் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

கனடாவில் உத்தேச மதிப்பாக 15 சதவீத வீடுகளில் குறைந்தது ஒருவர் தினசரி புகைப்பவராக இருப்பார்.

ஒரு பகுதியினர் வீட்டின் மதிப்பு 10௧9 சதவீதம் குறையலாம் என்று கூறும்போது  இன்னொரு பகுதியினர் 20௨9 சதவீதம் குறையலாமெனக் கூறியிருப்பதாக அறியப்படுகின்றது.

778 total views, 1 views today