கொஞ்ச நாளைக்கு முன் ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் கொடுத்து புதுப்படத்தில் நடிக்க வைக்க ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா தீவிரமாக முயற்சித்து வருவதாக செய்திகள் பரபரப்பாக வெளியானது நினைவிருக்கலாம்.

ஆனால் இதுபற்றி யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சக்ஸேனா அலுவலகத்தில் ரஜினியுடன் பேசியிருப்பது உண்மைதான் என்றார்கள்.

இந்த நிலையில், நேற்று சுண்டாட்டம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இந்த விவகாரம் குறித்து லேசுபாசாக சில உண்மைகளைச் சொன்னார்.

விழாவில் பேசிய அவர், “எல்லோரும் ரஜினி சாரை வைத்து படம் பண்ண ஆசைப்படுவாங்க, அதே மாதிரிதான் நானும் ஆசைப்பட்டு அவரைப் போய் பார்த்து வந்தேன். சரி, யோசிக்கலாம்னு சொல்லியிருக்கார். அவர் நெனைச்சா நான் அவரை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுவேன்,” என்றார்.

பின்னர் அவரைத் தொடர்பு கொண்டு, ‘ரஜினி சாருக்கு சம்பளமாக ரூ 240 கோடி தருவது உண்மைதானா?’ என்றோம்.

அதற்கு பதிலளித்த சக்ஸேனா, ‘அவர் விஷயத்தில் சம்பளம் ஒரு பொருட்டல்ல. அவர் சம்மதம்தான் முக்கியம். மற்றவை முடிவானால் நானே சொல்கிறேன்,” என்றார்.

7,875 total views, 1 views today