இன்றைய ஆங்கில பாடலுலகில் தமக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ள ஜஸ்ரின் பிபரும் சலினா கொமெசும் தங்கள் காதலில் இடைவெளி ஏற்பட்டுள்ளதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளனர்.

கனடா ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள ஸ்ராட்போட் என்ற நகரில் பிறந்த ஜஸ்ரின் பிபர் தனது 14 வயதில் வெளியிட்ட “you tube” வீடியோ மூலம் இனங்காணப்பட்டு இளவயதிலேயே பாடலுலகில் பிரபல்யம் பெற்றவர். இப்போது உச்சத்திலிருக்கும் பாடகர்களில் ஒருவராகத் திகழந்து வருகிறார். இவரது முன்னேற்றத்தைப் பற்றிய Never say never படம் கடந்த ஆண்டு திரையரங்குகளை வந்திருந்தது.

அமெரிக்காவில் நியுயோர்க் மாநிலத்தில் பிறந்த சலினா கொமெஸ் தனது நடிப்பாற்றலின் மூலம் 10 வயதிலேயே தொலைக்காட்சியுலகிற்கு அறிமுகமாகி ஹனா மொன்ரானா நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர். இதன் பின் இவர் தனது பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.

இவர்களிடையேயுள்ள ஒரு ஒற்றுமை பிறந்த சில காலங்களிலேயே தந்தையர் பிரிந்துவிட தாய்மாரல் இவர்கள் வளர்க்கப்பட்டு பிரபல்யமானவர்கள். பிள்ளைகள் பிரபல்யமானதும் தந்தையர்கள் மீண்டும் குடும்பத்தோடு இணைந்தது தனிக்கதை.

இப்படியான இந்த இரண்டு பிரபல இளநட்சத்திரங்களின் காதல் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியுலகிற்குத் தெரியவந்தது. என்ன ஆனதோ ஏது ஆனாதோ தெரியவில்லை இப்போது இருவருமே தங்களது பாடல்களைத் தயாரிப்பதில் கவனத்தை செலுத்துவதாகவும். ஒருவரையொருவர் சந்திப்பதில்லையென்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேற்குலகின் ஊடகங்கள் காதல் கசந்துவிட்டது பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தியை தயக்கமேதுமின்று வெளியிட்டு இவர்களின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டன.

5,868 total views, 1 views today